கெங்கவல்லி: கெங்கவல்லி அரசு மருத்துவமனையில், "குடி'மகன்கள் தொல்லையால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே, மருத்துவமனையில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கெங்கவல்லி யூனியன் அலுவலகம் அருகில், அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, 30 பெட் வசதிகளும், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு, அவசர சிகிச்சை பிரிவும் செயல்படுகிறது.
தவிர, பொது மருத்துவ சிகிச்சை அளிப்பதால், நாள்தோறும், 350க்கும் மேற்பட்டவர்கள், சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை, 11.30 மணியளவில், போதையில், பைக்கில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த பழனிவேல், 48, என்பவர், அரை நிர்வாண கோலத்தில், சிகிச்சைக்காக வந்தார்.
அவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் மீது விழுந்து, மருத்துவமனை பணியாளர்களிடம் ரகளையில் ஈடுபட்டு, மருத்துவமனையை வலம் வந்ததால், சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் அச்சமடைந்தனர்.
பின்னர், அவருக்கு சிகிச்சை அளித்து, மருத்துவமனையை விட்டு வெளியேற்றினர். அங்கிருந்து புறப்பட்டு சென்றவர், மீண்டும், 12.30 மணியளவில் மருத்துவமனையில் நுழைந்து, ரகளையில் ஈடுபட்டவர், மாலை, 5 மணி வரை மருத்துவமனையை விட்டு வெளியேறவில்லை.அதனால், சிகிச்சை மேற்கொள்ள வந்த நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, 24 மணி நேரம் செயல்படும் வகையில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். - Thanks Dina Malar
Tuesday, 25 March 2014
அரசு மருத்துவமனையில் "குடி'மகன்கள் தொல்லை
Labels:
NEWS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment